Monday, March 30, 2009

சுடுகாட்டு நாயின் கதை.


ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஓன்றை அது கவ்விக்கொண்டு வந்த்து அதை வாயிலிட்டு பற்களால் பலமுறை கடித்துப் பார்த்த்து எலும்பு நாயின் வாயில் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்த்து இரத்தம் தோய்ந்த அவ் வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்த்து எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு ஓகோ கடிக்க்க் கடிக்க எலும்பினுள்ளிருந்து இரத்தம் வருகிறது,என்று நினைத்து,அவ்விரத்த்தை நக்கிக் குடித்த்து மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிக பிரயாசையோடு கடித்த்து தன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. மிண்டும் நாய் எலும்பை கீழே போட்டு இரத்த்தை குடிப்பதும் மீண்டும் எலும்பை கடிப்பதுமாகவேலை செய்து கொண்டிருந்த்து உன்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை,தன்வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை.

இதுபோலவே,மனிதன் வெளிப் பொருள்களை அனுபவிக்கும் போது தன்னுள்ளுள்ள சுகத்தையே சிறிது பெருகிறான் ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாக்க் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்துகொள்கிறான் அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல மீண்டும் மீண்டும் வெளிப் பொருள்களைத் தேடுவதிலேயே அதற்காக உழைப்பதிலேயே, வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்!. அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது ? கணக்கற்ற

துன்பக் குவியலும், பகைவுணர்வுகளுமே மிச்சம்!, இதுவே அறியாமை அல்லது மாயை,!!

உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து தற்கால அணு வாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம்.அறிவுத்துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுக ளெல்லாம்,திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற் றல்லவா ஓளிக்காமல் சொல்லப்பட்டால் உண்மை இதுவே ஏனெனில் வெளிப் பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வெறென்ன நிகழ்திருக்கிறது சொல் உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது சுகம் வெளிப் பொருள்களிருந்து வருகிறது என்ற தப்புக் கொள்கையே தான் வேறொன்று மில்லை எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்ற எண்ணிய நாய்க்கும் இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப் பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ட்சி முன்னேற்றத் தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறு சொல் ஓன்றுமேயில்லை யன்றோ.

Monday, March 23, 2009

உலகின் நோக்கம் ஓழியா வின்பம்


உலகம் அறிவால் முன்னேறுகிறது. அறிவின் விளக்கமே உலகிற் காணப்படும் சிறப்புக்கள் உலகம் எதை நோக்கி முன்னேறுகிறது உலகிற்கு என்ன வேண்டும் ஊன்றி கவனித்தால், உலக ஜீவர்கள் அனைவரும் சுகத்தை யடையவே பாடுபடுகிறார்கள் என்பது தெரியவரும் எறும்பு முதல் ஏகதிபத்தியக்காராகளாகிய சக்கரவர்த்திகள் வரை அனைவரும் உழைக்கின்றனர் எதற்காக சுகத்திற்காகவே.ஓவ்வெருவருக்கும் தற்போது தனக்குள்ள நிலையைவிட சுக்கரமான ஓரு நிலை வேண்டுமென்ற ஆவல் இருக்கிறது.ஓருவன் மிகப்பாடு பட்டு உழைத்து, வாழ்வுக்கு வேண்டிய,உணவு,வீடு,மனைவி,மக்கள்,உத்தியோகம்,போன்ற பல சுக சாதனங்களை விருத்தி செய்கிறான்.ஏனெனில் அவைகளிலிருந்து தனக்குச் சுகமுண்டாகும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறான்

இவ்வாறு மனிதன் தேடும் சுகமானது அவனால் அனுபவிக்கப்படுகிறது.ஆனால் அது நீடித்து நிற்பதில்லை.கொஞ்ச நேரமே சுகம் போல் தோன்றி,பிறகு அதுவிலகிவிடுகிறது. ஓரு மனிதன் தன் வாழ்வில் சுகம் அனுபவிக்கும் பற்பல வழிகளையும் ஆராய்தால் ஓரு முடிவுக்கு வரலாம்.அதாவது,மெய்,வாய்,கண்,மூக்கு,செவி,ஆகிய இவ் வைந்து கருவிகளால் அனுபவிக்கப்படுவதே இப்போது மனிதன் கண்டுள்ளசுகம்.இவ்வைம் பொறிகளுக்கும் வேண்டியவற்றைத் தேடுவதே,இன்று வரை மனித சமுகத்தின் பேருழைப்பாக இருந்து வருகிறது.

கண்ணுக்கு இனியதைப்பார்கும் போது மனிதன் ஆனந்தமடைகிறான், அக் காட்சி நீங்கினால் துக்கமடைகிறான்,காதுக்கு இனிய ஓசையையோ,பேச்சையோ கேட்கும் போது ஆனந்தந்தையும்,அது நீங்குவதால் துக்கத்தையும் அடைகிறான்.காட்சி ,கேள்வி இவைகளைப் போலவே ஸ்பரிசம் தொட்டுணர்வது,ருசி,மணம்,வாசனை ஆகியவைகளையும் சுக வடிவாகவும் துக்கவடிவாகவும் மனிதன் அனுபவிக்கிறான் பஞ்சேந்தியங்கள் என்று சொல்லபடும் இக் கருவிகள் ஐந்தும் மனிதனுக்கு சுகத்தைக் கூட்டி வைப்பதாகத் தோன்றினாலும்,அவைகள் எப்போதும்

இடைவிடாமல் சுகம் தருவதில்லை.

கொஞ்சங்கூட துக்கம் கலக்காத முழுச்சுகத்தையே மனிதன் எவனும் விரும்புகிறான் என்பது திண்ணம்.இதை மறுக்கமுடியாது.ஆனால் அவ்வித சுகத்தை இதுவரை எந்த மனிதனும் அடையவில்லை ஆனால் அப்படிப்பட்ட சுகத்தை அடைய முடியாதா முடியும் முழுச்சுகமாகிய பெரிய இன்பம் மொன்றை அடைய வேண்டுமென்று உயிர்கள் விரும்புவது தப்பல்ல ஆனால் அதற்க்கு இந்நாள் வரையில் மனிதர்கள் நிருமாணித்து நடத்தி வரும் திட்டந்தான் தப்பாக விருக்கிறது அதனால்தான் மனிதன் எவ்வளவுதான் உழைத்தும் அந்தப் பூரண சுகத்தை அடையவில்லை.

இவ்விதம் சகல ஜீவர்களும் விரும்பும பரிபூரண சகத்திற்க்கு அழைத்துச் செல்லும் மார்க்கங்களே உலகில் தோன்றியுள்ள மதங்களாகும். மதம்என்றால் மதிக்கப்பட்ட கொள்க்கள் அல்லது வழிகள் என்று பௌருள்படும். எந்தவழியில் முயன்றால் பூரண சுகத்தை யடையலாம் என்பதைக் காட்டிக் கொடுப்பதே மதங்களின் வேலை.ஆனால் இக் காலத்தில் மனிதன் மதாபிமானம் என்ற ஓரு வெறி மயக்கத்தாலும்,மதங்களின் உன்மையைச் சரியாகப் புரிந்து கொள்ள வியலாத அறியாமையாலும்.பரிபூரண சுகநிலையே மத்த்தின் முலம் அடையமுடியாமல் இடை வழியிலேயே தடுக்கப்பட்டு விடுகிறான்.

மனிதர்களுள் சுகத்தை விரும்பாதவர்கள்யாராவதுண்டா கடவுளை இல்லை என்று கூறுவோர்கூட தமக்குச்சுகம் வேண்டாமென்று கூறமாட்டார்கள் மனித தேகம் பெற்ற எவனும் இதற்க்கு விலக்கல்ல.