Wednesday, April 8, 2009

பக்தி என்ப தென்ன?ஓருத் தொடர் கல்வி ஆழ்ந்து படிக்கவும்


பக்தி என்ப தென்ன?

அது ஓரு பிரிய வுணர்ச்சி,அன்புணர்வு,இப் பிரிய வுணர்ச்சி எல்லா வுயிர்களிடமும் இயல்பாக எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கின்றது.எவன் எதை விரும்பிகிறானோ அவன்அதை பக்தி செய்கிறான் என்றே பொருள்.எல்லா வுயிர்களிடமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இவ் வன்பு தன் பரிசுத்த இயல்பு நிலையிற் கங்கா ஜலம் போற் பரிசுத்தம்மானது. ஆனால் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தின் சுத்தாசுத்தத் தன்மைக்கேற்ப,ஓரேகங்காஜலமே யாயினும் உபயோகத்தின் போது உயர்வு தாழ்வுகளை யுடைய தாகின்றதன்றே,அவ்வாறே ஜீவர்களின் சித்தாசுத்திக் கேற்ப பக்தியும் படிப்படியான உயர்வு தாழ்வுகளை உடையதாகின்றது,இவ்விதம் உயிர்களிடம் காணப்படும் பக்தி அல்லது அண்புணர்ச்சியை அதன் சுத்தாசுத்தத் தன்மைக் கேற்ப ஐவகையாகப் பிரிக்கலாம்.

வேதம் என்பது அறிவு,அவ் வறவோர் கண்டறித்து உலகினாக் கீந்த ஓழுக்க நெறிகளே வேதம்,ஆதி மனிதனிடம் புயல் வீசிக்கொண் டிருக்கும் உலகாசை வெறியாகிய அசத்தப் பிரிய வுணர்ச்சியை அதாவது விஷய பக்தியை க் கிரம்மாகத்தான் சுத்தம் செய்ய வேண்டியிருக்கின்றது. பக்தி சுத்தீகரிக்கப்படும் பள்ளியாகிய வேத்த்திடம் இதுவரை வந்து சேராத மனிதன் மிருகமே!

பக்தி அல்லது அன்பின சுத்தீகரிப்பு நடைபெறும் வேதநெறியாகிய பள்ளியில் ஐந்துவகுப்புக்கள்உள்ளன.ஆனால் ஆசிரியர் மட்டும் ஓருவரே இது ஓராசிரியர் பள்ளி வேதநெறியாகிய மாகான்களின் உரைகளே இப்பள்ளியிலுள்ள ஓராசிரியர். பல படித்தரங்களூடே அன்புணரவு சுத்தீகரிக்கப்பட வேண்டிய மனித சமூகம் முழுவதையும் ஓரு மனிதன் என்றும், வேதாந்த நெறிக்கள் முழுவதையும் ஓர் ஆசிரியர் என்றும் இனி இங்குக் குறிப்பிட்டுஅழைப்போம்.

எனினும் பக்தி பள்ளியில் ஓவ்வொரு வகுப்பிலும் மனிதனின் அன்புணர்ச்சி எவ்வாறு சுத்தமாக்கப்பட்டு, அவன் அடுத்த வகுப்பிற்க்கு முன்னேறுகிறான் என்பதை மேலே விழக்க புகுமுன் அவ் வைந்து வகுப்புகளையும் பற்றி ஓர் சுருக்கமான விபரத்தை முதலில் இங்கு காண்போம்.

வலிமையே ஞாயம்(might is right)

முதல்வகுப்பு

வலிமையே ஞாயம் என்ற ஓழுங்கற்ற, மிருகத் தன்மையால் தனது ஆசைகளை யெல்லாம் நிறை வேற்றிக்கொள்வது அசாத்தியம்என்ற்றிந்த மனிதன் பிறகு பக்திப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தபின், விகிதர்மங்களாகிய தர்ம நெறியைப் பின் பற்றினால் மட்டுமே தன் ஆசைகளை யெல்லாம் தவறாமல் பூர்த்தியாக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு கர்மங்களை இயற்ற ஆரம்பிக்கின்றான். அவன் வேதங்களாற் கூறப்பட்ட கர்மங்களையே செய்கிறா னென்றாலும்,அவற்றைச்செய்யும் தன்முயற்சியையுந் திறனையுமே தான் தன் வெற்றிக்கு அவசியமானதாக்க் கருதி நிற்கிறானே தவிர,தனக்குமேல் கடவுளின் சக்தி ஓன்று இருக்கிறது என்பதை அவன் அறிந்தானில்லை.தான் செய்யும் கர்மங்கள் தாமே பலனைக் கொடுத்துவும்,கொடுத்தேயாக வேண்டும என்றவாறு தன் கர்மங்களிலேயே முழு நம்பிக்கை உடையவனாய்,கடவுள் என்று ஓருவர் இருந்தாலுங்கூட அவர் தனது கர்மங்களின் போக்கில் வந்து குறுக்கிட முடியாது என்றும்,கடவுளுங்கூட இத்தியாதி கர்மங்களின் முலம்தான் சக்தி பெற்றிருப்பார் என்றும்,எனவே கர்மங்களைத்தவிர கடவுள் வேறொன்று மில்லை என்றும் நம்பி அவ்வளவு துரம் கர்மபரனாகவிடுகிறான்.

இரண்டாம் வகுப்பு

இரண்டாம் வகுப்பில் இம்மனிதன் வேதங்களால் விதிக்கப்பட்டகாமியக் கர்மங்களைசசெய்தால் மட்டும் தனது ஆசைகளை யெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு விடமுடியா தென்பதும்,கடவுளின் ஆஜ்ஞைக்கு உட்பட்டே கர்மங்கள் பலனைத் தரக்கூடியவே என்பதையும் உணர்கிறான்.ஆகையால், கர்மங்களுக்கு மேலான கடவுளின் சில தெயவீக சக்திகளின் தயவால் கர்ம பலன்களை எளிதில் அடைய முடியும் என்று கண்டு,கடவுளின் பலவேறுபட்ட சக்திகளையுடையனவான பலநாமரூபத் தெய்வங்களை உபாசித்து அவற்றின் தயவால் தனது பற்பலவான அசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நம்பி நானா தெய்வ உபாசனைகளில் ஈடுபடுகிறான்.கடவுள் ஓருவரே அவர் ஓருவரே நானா தெய்வ நாம ரூபங்கள் மூலமாகவும் அருள் செய்து வருவார் என்ற உன்மை இன்னும் அவனுக்குத் தொரியாத்தால்,தான் பலவித ஆசைகளும் நிறைவேற பல்வேறு நாமரூப உபாசனைகளும் அவசியம் செய்தே யாகவேண்டும் என்றெண்ணி உபாசிக்கிறான்.கடவுள் ஓருவரே என்ற உண்மையை அப்பொழுது அவனுக்குக் கூறினாலும்,அவனது மனம் பக்குவப்படாத்தால், அந்தந்தக் காமியங்களை யருளும் சக்தி அந்தந்த நாம ரூபங்களுக்குத்தான் உண்டு என்று அவன் நம்புவதால் அம் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

மூன்றாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பிலோ,உண்மையாகவே கடவுள் ஓருவர்தான் இருக்கிறார் என்றும் அவரது சக்தியே இதற்குமுன் தான் உபாசித்த பல வேறு நாமரூபங்களின் மூலமாகவும் தனக்கு உதவி வந்த்து என்றும் அறிகிறான். அறிந்த்தும் அவன் மனம் நானாரூபங்களிடம் ஓடிச்செல்ல விரும்பாமல் தான் இஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஏதாவதொரு நாமரூபக் கடவுளே தன்இஷ்ட தெய்வம் ஓன்றே தான் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து வைக்கக் கூடியவர் என்றுணர்ந்து அந்த இஷ்டதெய்வம் ஓன்றையே ஏகாக்கிரமாக உபாசிக்க ஆரம்பிக்கிறான்.

இந்த மூன்றாம் வகுப்போ(a) என்றும்(b) என்றும் இருபிரிவுகளாகப் பிரித்து விளக்கப்படுகிறது.மூன்றாம் வகுப்பின்(a)பிரிவிலிருக்கும் மனிதன் ஏகதெய்வ ஏகாகிர பக்தியுடையவனா யிருந்த போதிலும், இன்னுங்கூட தனது உலகவிஷயாசைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே தன் இஷ்டதெய்வத்தை உபாசிக்கின்றான்.அதன்பிறகு நல்ல விவேகமுதித்து, தன் இஷ்ட தெய்வத்தின் மேல் மட்டும் அன்பு பெருகும் போது,இஷ்ட தெய்வத்திடமிருந்து உலக விஷயாசைப் பொருள்களை யாசிப்பதை விட்டு விட்டு, இஷ்ட தெய்வத்தின் அன்புக்காக மட்டும் அன்பு செய்கின்ற நிஷ்காமிய பக்தியைப் பெறுகின்றான்.அவன் மூன்றாம் வகுப்பின் (a)பிரிவிலிருக்கும் போதெல்லாம் அவனது பக்தி விஷய பக்தியே.மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில்தான் அவனது பக்தி தெய்வ பக்தியாக மலர்கிறது.

நான்காம் வகுப்பு

நான்காம் வகுப்பில் இம் மனிதன் மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில் உபாசித்த தன் இஷ்டதெய்வமே மனித உருக்கொண்டு இவன்முன் சற்குருவாக வந்து தோன்றுகின்றது. உலக விஷயாசைக் கலப்பற்ற,உத்தம்மான,ஏகாக்கிர, இஷ்டதெவ பக்தியின் மகிமையால் விகாச முற்றிருந்த அவனது பரிசுத்த உள்ளம் இப்போது தன் முன் மனித வடிவிற் காணப்படும் சற்குரு வானவர் தான் முன்பு உபாசித்த தன் இஷ்ட தெய்வமேதான் என்ற உன்மையை அறிய முடிகிறது. அதனால் இஷ்டதெய்வ நாம ரூபத்தின் மேலிருந்த நிஷ்காமியப் பேரன்பு முழுவதும் அப்படியே இப்போது சற்குருவின் நாமரூபத்தின் மேல் அவனுக்கு ஏற்பட்டு விடுகின்றது.ஆனால் சற்குருவோ அவனுக்குத் தன் நாமரூபத்தின் மேல்

Sunday, April 5, 2009

“இந்த நான் யார்?


பலனில் இச்சையற்றுக் கர்ம்ம் புரி என்கிறது கர்மயோகம்,

இதரப் பொருள்களை விரும்பாதே கடவுளை விரும்பு என்கிறது பக்தியோகம்.

இறைவனிடமிருந்து பிரிந்து நீ ஜீவனாகிச் சிறுமைப் பட்டு விட்டாய் அவனிடம் மீண்டும் போய்ச் சேர் என்கிறது இராஜ யோகம்.

நீ அவனை அறி என்கிறது ஞானயோகம்.

இந்த நான்கிலும் நான் ஓருவன் இருந்துக் கொண்டே நிஷ்காமிய கர்ம்ம் புரிய வேண்டும் நான் ஓருவன் இருந்துக் கொண்டே இறைவனை நேசிக்க வேண்டும்,பிரிந்து வந்தவனாகிய நான் ஓருவன் இருந்தே அவனைப்போய்ச் சேரவேண்டும் இறைவனை அறியாத நான் ஓருவன் இருந்தே அவனை அறியமுற்படவேண்டும்,இவ்வாறு இந் நான்கு யோகங்களிலும் நான் இவன்

அல்லது நான்இது என்ற ஓரு தனிப்பட்ட (ஜீவ) இருப்பு அவசியப் படுகிறது.இந்த நான் இல்லாமல் எந்த யோகமும் செய்ய முடியாது

இந்த நான் யார்? பதில்