
நாம் உலகை காண்கின்றோம் நம்மால் முடிந்தவரை அதைபற்றி ஆராய்கின்றோம்.எனினும் உலகங்களின் உன்மை நம்அறிவுக்குள்அகப்படாதப்படி அளவற்றுக் காணப்படுகின்றன.கடவுளப் பற்றிய விசயமும் அத்தகையதே.கடவுளப்பற்றியும் நம் மதங்கள்வர்ணித்து வர்ணித்து அளவில்லாமற் கூறுகின்றன. ஆயினும் சாமானிய மனித அறிவு அவை யொன்றையுங் காண முடியாமல்இருப்பதால் மனிதனுக்கு(நமக்கு) க் கடவுளப்பற்றிய எண்ணற்ற பிரச்சினைகள் எப்போதும் எழுந்துக்கொண்டேயிருக்கின்றன.எனவேஉலகம் -கவுள் என்றஇரண்டின் பிரச்சினைகளும் உயிராகிய நமக்கே மிக அதிகமாக இருந்து வருகின்றன. ஆகையால்உயிராகிய நான் யார் என்ற ஆராய்ச்சியே முதன் முதலில் மேறக்கொள்ளத்தக்கது.கடவுளையும் உலகையும் பிறகு பார்த்துக் கொள்வேம் உன்னை முதலில் அறி என்ற தன்மையறிவின் அவசியத்தைமுதலில் பார்போம் தன் கண்ணில் அணிந்திருக்கும் கண்ணாடி என்ன நிறம் என்று அறியாத ஓருவன் அவ் வர்ணக்கண்ணாடி மூலம் பார்த்து மற்ற பொருள்களின் உண்மையான நிறத்தை எப்படி தீர்மானிக்கமுடியும்.